Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பத்திரிக்கையாளர் சந்திப்பு… பட்டாக்கத்தி சம்பவம்… விஜய் சேதுபதியை விமர்சித்த அர்ஜுன் சம்பத்….!!

விஜய் சேதுபதி மீது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் பலரை குறித்து சரமாரியாக குற்றங்களை அடுக்கினார்.

அதில் அவர் விஜய் சேதுபதி பற்றி கூறியது:- நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவர் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Categories

Tech |