தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் உருவானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை குவித்ததோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இடம் பொருள் ஏவல் திரைப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் சில பிரச்சனைகளால் கடந்த 7 வருடங்களாக படத்தை ரிலீஸ் செய்யவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் தற்போது சுமூகமான முறையில் பேசி தீர்க்கப்பட்ட நிலையில், இடம் பொருள் ஏவல் திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.