Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி கிடையாது… கைப்பற்றிய பாபி சிம்ஹா..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும்  பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி  இடத்தை பிடித்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் புஸ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் உருவாக்கம் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டுள்ளது.  இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தமிழ் என 5 மொழிகளில் உருவாக இருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக  ராஸ்மிகா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் சில காரணத்தின் அடிப்படையில்  அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதே கதாபாத்திரத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல் பரவிவருகிறது. இவர் ஏற்கனவே ரன், டிஸ்கோ ராஜா, சைஸ் ஜீரோ ஆகிய தெலுங்கு படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |