Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி படத்தில் விஜய்சேதுபதி … இதுவா அவரது கேரக்டர் ?

 ‘லால்சிங் சாதா’ என்ற  திரைப்படத்தில்  விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் வெளியிடப்பட்டுள்ளது .

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் படத்தில்  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது .  இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம்  குறித்த தகவல்கல்  தற்போது வெளியாகியுள்ளது . மேலும் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான  “Forrest Gump” என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார்.

Image result for அமீர்கான்

இந்த படத்திற்கு ‘லால்சிங் சாதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது .  இந்த படத்தில் அமீர்கான், டைட்டில் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் மேலும் அமீர்கானுக்கு நண்பராக  விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் விஜய்சேதுபதி இந்த கேரக்டருக்கு நடிக்க தேர்வு செய்யப்பட்டதுக்கு  ஒரு முக்கிய காரணம் உள்ளது.

Image result for 'லால்சிங் சாதா'

இந்த  ‘லால்சிங் சாதா’ படத்தில் அமீர்கானின் நண்பராக நடிப்பதற்கு  ஒரு தமிழன் போன்று  திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால் விஜய்சேதுபதி இந்த கதாபாத்திரத்தில்  நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |