18 வயது இளம் நடிகை குறுகிய காலத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் உப்பென்னா. வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 18 வயது இளம் நடிகை குறுகிய காலத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.