தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த வேடத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அது தனது மனதுக்கு பிடித்தால் உடனடியாக ஏற்று நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் மாணவர்களுக்கு பயன்படும் பல்வேறு விதமான நல்ல விஷயங்களை விஜய் சேதுபதி கூறினார். அப்போது செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற திருக்குறளை கூறினார். இந்த குரலில் தலை என்ற வார்த்தை வந்தவுடன் மாணவர்கள் ஆரவாரம் செய்து ஆக்ரோஷமாக குரல் எழுப்பினர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, ஏன் இப்ப சத்தம் போடுறீங்க. நாம என்ன விஷயத்தை பேசிட்டு இருக்கோம். நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க என்று சற்று கோபமாக பேசினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#VijaySethupathi speech at Loyola college function..🤙pic.twitter.com/F1beWqbcPz
— Laxmi Kanth (@iammoviebuff007) October 2, 2022