Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி…. வெளியான சூப்பர் தகவல்…!!

கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஹிட் படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமலை வைத்து “விக்ரம்” என்னும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது.

ஆனால் நடிகர் கமல் தேர்தல் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தேர்தல் நிலவரம் தெரிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |