Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு….!

விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் “துக்ளக் தர்பார்”. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துவருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

அரசியலின் கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இப்படத்தின் “அண்ணாத்தேசேதி” என்ற பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |