அஜினோமோட்டோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அஜினோமோட்டா’. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர். எஸ். கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகியாக காயத்ரி ரேமா நடிக்கிறார். டி.எம். உதயகுமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ். எம். ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.