நடிகர் விஜய் சேதுபதி ஸ்டைலில் ரோபோ சங்கர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார் . இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .
https://twitter.com/imroboshankar/status/1363106937500499969
மேலும் ரோபோ ஷங்கரின் மகள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் ரோபோ சங்கர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘பொளக்கட்டும் பற பற’ பாடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஸ்டைலில் நடனமாடிய வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .