Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போலீஸாக மிரட்டும் விஜய் சேதுபதி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் என்று தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி செக்கச் சிவந்த வானம், சேதுபதி போன்ற படங்களை ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக நடித்து தனது மிரட்டலான திறமையைக் காட்டினார். இந்நிலையில் அவர் மீண்டும் போலீசாக களம் இறங்கியிருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

Categories

Tech |