Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசாசு 2” படத்தில் இணையும் விஜய் சேதுபதி…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்

தமிழ் திரையுலகில் கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் “பிசாசு”. திகிலும், சுவாரஸ்யம் நிறைந்த இப்படத்தில், நாகா, ராதாரவி பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஆன்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசாசு 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதன்பின் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

தயவுசெய்து வேண்டாம்: ட்வீட் சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி கருத்து | vijay  sethupathi press meet - hindutamil.in

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிசாசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிசாசு2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Categories

Tech |