Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா….! ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு …!!

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக  நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது கையில் மாஸ்டர், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களை வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் இயக்க இருக்கும் பயோபிக்கிலும் நடிக்கவிருகிறார். அதோடு தேவர்மகன் படத்தில்  2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருப்பதாக  தெரியவந்துள்ளது.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க இருக்கும் இப்படத்தை விஜய் இயக்க உள்ளதார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் அனுஷ்கா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாகவும், விஜய் தலைவி படத்திற்கு பின் இப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தெரியாவத்துள்ளது.

 

Categories

Tech |