விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பை காண்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அந்த மண்டபம் முன் குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்,முக கவசம் அணியாமல் இருந்துள்ளனர். இதனால் சுகாதாரத் துறையினர் படக்குழுவினருக்கு கொரோனா விதிகளை பின்பற்றாததால் 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.