நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முதலாக நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . ‘மும்பை கார்’ என்ற டைட்டில் லுக் போஸ்டரை சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார் . இது விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .
Here's the title look of #Mumbaikar! Happy to be a part of it 😊😊@santoshsivan @shibuthameens @masseysahib #TanyaManiktala @imsanjaimishra@RanvirShorey @SachinSKhedekar@iprashantpillai @hridhuharoon#RiyaShibu @proyuvraaj pic.twitter.com/zythMcokIb
— VijaySethupathi (@VijaySethuOffl) January 1, 2021
இந்த படம் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் . இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார் . இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவர் விக்ராந்த் மாஸ்ஸே மற்றொருவர் விஜய் சேதுபதி . மேலும் இந்த படத்தில் தான்ய மாணிக்தலா, ஹிர்து ஹாரூன் ,சச்சின் கேடேகர், ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . பிரசாந்த் பிள்ளை இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .