நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி தற்போது கைவசம் எக்கச்சக்க திரைப்படங்களை வைத்துள்ளார் . நடிகர் விஜய்சேதுபதி அவரது புரோடக்சன் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் . தற்போது இந்த நிறுவனம் ஒரு மணி நேரம் ஓடும் ‘முகிழ்’ என்ற வெப் திரைப்படத்தை தயாரித்துள்ளது . இந்த படத்தின் டிரைலர் புத்தாண்டில் வெளியாகும் என ஏற்கனவே விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . இந்தப் படத்தில் நடிகை ரெஜினா, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தை கார்த்திக் இயக்குகியுள்ளார் . பெண் இசையமைப்பாளர் ரிவா இசையில் ,சத்யா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது .