Categories
சினிமா தமிழ் சினிமா

நானும் தளபதியும் புதிய படத்திற்கு ரெடி – சங்கர்…… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….. எப்போது படப்பிடிப்பு….?

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .
தளபதி விஜய் – டரைக்டர் சங்கர் கூட்டணியில் கடைசியாக 2012-ல் வெளிவந்த நண்பன் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அது நேரடியான தமிழ் படம் கிடையாது. ஹிந்தி மொழியில் அமீர்கான் நடித்து வசூல் அடித்த 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்கி இருந்தனர். இருவரும் இன்னொரு புதிய படத்தில் மறுபடியும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே ஆசைப்பட்டனர் . ஆனால் இதுவரை அந்த ஆசை நடக்கவில்லை.
இந்நிலையில் சங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுப்பீர்களா? என்று கேட்ட போது, நானும் விஜய்யும் ரெடி. நாங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு புதிய படத்தில் இணைய ரெடியாக இருக்கிறோம் என்று கூறினார். இது குறித்த ஷங்கரின் பதிலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?
இந்த நிலையில் புதிய படத்தில் விஜய்க்கான கதையை சங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறன்றது. மேலும் கதையை விஜய்யிடம் சொல்லி அவரின் ஒப்புதளையும்  பெற்று விட்டதாக கூறப்படுகின்றது. விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துகொண்டிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு பணி  ஒருசில மாதங்களில் முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கரும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இருவருமே படபிடிப்பு பணிகளை முடித்து விட்டு மீண்டும் புதிய படத்தில் இணைவது பற்றிய தகவலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Categories

Tech |