நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில் வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல நடிகர் ரஜினிகாந்த் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே போல நடிகர் சூர்யா , விஜய் , சமுத்திரக்கனி , பிரகாஷ்ராஜ் , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் அரசியல் குறித்த சமூக கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பலரின் கருத்து பொதுவெளியில் விவாதமாக மாறினாலும் , சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து பேசியது அரசியல் விவாதமாக மாறியது. குறிப்பாக அமைச்சர்கள் சூர்யாவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவித்தனர்.அதே போல் நடிகர் விஜய் உட்பட திரை பிரபலங்கள் இப்படி சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கும் போதும் அரசியல் கட்சிங்களால் எதிர்ப்பு கிளம்புவது வழக்கனமா ஓன்று.
அந்த வகையில் நடிகர் விஜய் பிகில் தனது பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து பேனர் வைக்க வேண்டாம் , சமூக பிரச்சனையைகேளுங்கள் என்றுஅடுக்கடுக்கான அறிவுரைகளுடன் , ஆளும் அரசையும் தாக்கி பேசினார். இதற்கு ஆளும் அரசு இது விளம்பரத்திற்கானது , படம் ஓட வேண்டுமென்பதற்காக , மக்கள் நலன் அல்ல , வியாபார யுத்தி என்று தெரிவித்து வந்தன.இது வியாபார நலனுக்கா அல்லது வியாபார யூக்தியா என்று யோசிக்கும் பட்சத்தில் இதில் நல்ல வியாபாரம் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
https://twitter.com/sabapadhiraja/status/1174902527340376064
நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் பலருக்கும் டிக்கெட் கிடைத்தும் உள்ள அனுமதி மறுக்க்கப்பட்டது. அதோடு குறைந்த இருக்கைகளுக்கு அதிகமான டிக்கெட்கள் விற்கப்பட்டன என விஜய் ரசிகர்களே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அதோடு இல்லாமல் டிக்கெட் கலர் ஜெராக்ஸ் போட்டு விற்கிறார்கள் என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
டிக்கெட்டை மோசடி செய்து பல லட்சக்கணக்கான பணத்தை ஆட்டைய போடுவதாகவும் தங்களது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.சமூக பிரசனைகளுக்காக ஹாஷ்டாக் போடுங்க என்று நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் , டிக்கெட் மோசடி என்ன பல கருத்துக்களை #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற ஹாஷ்டாக்_களில் பதிவிட்டு வருகின்றனர். விஜயின் பேச்சு மக்கள் நலனுக்கானதாக இருந்தாலும் நல்ல வியாபார யுக்தியாகவும் இருந்துள்ளது வேதனைக்குரிய விஷயம் தான்.
https://twitter.com/VMI_TamilNadu5/status/1174919855771795458
ஆடியோ லாஞ்ச்ன்னு பேர்ல VMI ஆளுங்கள வச்சி ரவுடிசம் பண்ணிட்டு இருக்காங்க விஜய் ரசிகர்கள்..டிக்கெட் கலர் ஜெராக்ஸ் எடுத்து வித்துருக்கானுங்க😂..கார் கண்ணாடியை ஓடச்சா போலீஸ் அடிக்காம கொஞ்சுவாங்களா டா தேவாங்கு.#அய்யோஅம்மாஆடியோலான்ச்#Viswasam#தலசாம்ராஜ்யம்
pic.twitter.com/dF6iZ68poB— TVK AKS 🫣 (@itz_aks) September 20, 2019
https://twitter.com/Nishma_darlz/status/1174913152711979009