நடிகர் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.