நடிகை சார்மிக்கு விஜய் தேவர்கொண்டா சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தை சார்மி தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை சார்மிக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிகை சார்மிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.