விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி ரசிகர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கேற்று தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவருடைய ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் உங்களுக்கு எப்போது திருமணம் என அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு சிவாங்கி கூறுயதாவது “எனக்கு இன்னும் 8 வருடம் கழித்து தான் திருமணம்” என உடனடியாக பதில் கூறியுள்ளார்.