கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவிகளை அறிவித்துள்ளார்.
குறிப்பாக கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தார்கள. இத்தனையும் கருத்தில் கொண்டு நடிகர் விஜய் தற்போது 1 கோடியே 30 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், கேரளம் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சமும், ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் என அறிவித்து, தனது ரசிகர்மன்ற நிர்வாகிகள் நேரடியாக கொரோனா தடுப்பு பணிகள், உதவிகளை செய்யவேண்டும் என்றும் நடிகர் விஜய் உத்தரவிட்டு மொத்தமாக 1.30 கோடி வழங்கி அசத்தியுள்ளார்.