விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், பிக்பாஸ், பிக் பாஸ் ஜோடிகள், கலக்கப்போவது யாரு? என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அது என்ன என்றால் ராஜூ வீட்ல பாட்டி. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வாராவாரம் ஒரு பிரபலங்களை அழைத்து அவர்களை வைத்து கிண்டல் அடித்து கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் வந்த நடிகர் யார் என்றால் மன்சூர் அலிகான். இவர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடிய ஒரு மனிதன். எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசிவிடுவார். இந்த வாரம் இவர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் ராஜுவை பார்த்து இவ்வளவு அழகாக இருக்க போய் சினிமாவில நடிக்கிறதை விட்டுட்டு இந்த நிகழ்ச்சியை பண்ணிட்டு இருக்க… என்று கலாய்த்த அவர் மதுரை முத்துவை குச்சியால் அடிக்கச் சென்று அங்கு இருந்தவர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தினார்.