Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்….. அவரே வெளியிட்ட கலக்கல் புகைப்படம்…..!!!

மதுரை முத்து புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

மதுரை முத்து சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் காமெடியனாக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

புதிய கார் வாங்கி புதிய பயணத்தை தொடங்கிய மதுரை முத்து.! - Cinebloopers |  Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

மேலும், இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவி பிரபலங்கள் பலர் தொடர்ந்து புதிய கார்களை வாங்கி வருகின்றனர். உதாரணமாக, மணிமேகலை, சிவாங்கி, தாடி பாலாஜி, சரத் மற்றும் பலர் தங்கள் கார்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டனர். அந்த வகையில் தற்போது மதுரை முத்துவும் புதிய காரை வாங்கியுள்ளார். காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CbMUEXQrk60/

Categories

Tech |