Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழுக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்…. எந்த நிகழ்ச்சி தெரியுமா…??

பிக் பாஸ் புகழ் வனிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ  தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் சில நாட்கள் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜீன்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவரது மகளுடன் பங்கேற்றுள்ளார். மேலும் பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற வனிதா பல படங்களை கைவசம் வைத்துள்ளார்

Categories

Tech |