விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்பொழுது நடித்த நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதனை விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நேர்காணல் குறித்த ப்ரோமாவானது விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நடிகை நயன்தாரா பகிர்ந்துள்ளார். குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை அடுத்து விக்னேஷ் சிவனிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களும் உள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.