ஜாக்குலின் நடித்து வந்த ‘தேன்மொழி’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் டி.ஆர்.பியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனையடுத்து, விஜய் டிவியில் புதிதாக ‘முத்தழகு’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜாக்குலின் நடித்து வந்த ‘தேன்மொழி’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.