கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது TRP-ல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் உடனுக்குடன் ஒளிபரப்ப இயலவில்லை. இக்காரணத்தினால் படங்களும், முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கால் தமிழ் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் TRP- மிகவும் கீழே சரிந்திருக்கிறது. அட ஆமாங்க… கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை எடுக்கப்பட்டுள்ள TRP வாக்கெடுப்பில் விஜய் டிவி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே 2ம் இடத்தை கே டிவியும், முதல் இடத்தை சன் டிவியும் பிடித்திருக்கிறது.
இதனால் முன்னணியில் இருந்த விஜய் டிவி மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். அதேபோல ஜீ தமிழ் 4ம் இடத்திலும், விஜய் சூப்பர் 5ம் இடத்திலும் இருக்கிறது.