விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக சன் டிவி எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புதியதாக சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதாவது ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது . இது யூடியூபில் சமையல் செய்யும் பிரபலங்களை நேரில் அழைத்து பேட்டி எடுப்பது போன்ற நோக்கத்தில் உருவாக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .