விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்படும் வரை எந்தவித படப்பிடிப்பும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-சீரியல் கூடிய விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் அந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 மெகா சங்கமம் ஒளிபரப்பப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது.