பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் எழில் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் சீரியலை தாண்டி விஜய் டிவியின் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அந்தவகையில், ‘காதல் கொண்டாட்டம்’ என ஒரு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, இவர் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.