சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்ட முறையில் தொடங்க உள்ளது.
சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதுவரை இந்த தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வந்தது.
இதனையடுத்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்ட முறையில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.