பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா பலரின் விமர்சனங்களுக்கு தக்க பதில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலின் கதை களத்தை இயக்குனர் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். மேலும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பரீனா அதிகமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த போட்டோ ஷூட்களை கண்டு பலர் நல்ல கருத்துக்களையும் சிலர் மோசமான விமர்சனங்களையும் கூறி வருகின்றனர். இதனை எல்லாம் பார்த்த பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ” கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தனை போட்டோ ஷூட் நடத்துகிறாய். ஏதோ நீதான் இந்த உலகத்திலேயே கர்ப்பமாக உள்ள மாதிரி என்று அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் நானோ அதற்கு, மாடலிங் என்னுடைய வேலை. நான் ஒல்லியாக அல்லது குண்டாக இருந்தால் அவர்களுக்கு என்ன பிரச்சனை. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேலை செய்யக் கூடாதா இவர்களுக்கெல்லாம் என்ன எரிகிறது. எனக்கு இது விளங்கவில்லை” என்று கூறியுள்ளார்.