தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது தீபக்கின் வயதை விட குறைவு என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் கதாநாயகனாக தொகுப்பாளர் தீபக் மற்றும் அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகின்றார். மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி-2 சீரியலில் நடித்து வருகிறார். குறிப்பாக இவருக்கு 36 வயது தான் ஆகிறது. இருப்பினும் 41 ஒரு வயதாகும் தீபாவிற்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.