இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது .
No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் 50 நாட்களை கடந்துள்ளது . இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .