Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்க்கு கதை பிடித்து விட்டதா?… மீண்டும் லோகேஷ் உடன் கூட்டணி..!!

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து வரும் தாதாவாகவும் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது உண்மையா என்பது படத்தை பார்க்கும்போது தான் தெரியும்.

படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதலில் வெளியான ‘மாநகரம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல அவர் இயக்கிய இரண்டாவது படமான கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படமும் ஹிட் கொடுத்தது. அதனால் இந்த மூன்றாவது படமும் வேற லெவலில் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் உட்பட அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு பின்னர், விஜய் தனது 65-ஆவது படத்தில் எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏற்கனவே மகிழ் திருமேனி, வெற்றி மாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மாஸ்டர் படப்பிடிப்பின் போது லோகேஷ் கனகராஜ் கூறிய மற்றொரு கதையும் விஜய்க்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும், அடுத்து அந்த படத்திலும்  நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |