ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலன் விசாரிக்கின்றார்.
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அன்பழகனுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ?
அரசின் சார்பில் என்னென்ன மாதிரியான உதவிகள் வேண்டும் ? என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஏற்கனவே சற்று முன்பாக தமிழக முதல்வர் ஜெ.அன்பழகனும் அளிக்கப்படக் கூடிய சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்த நிலையில் தற்போது முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.