தேமுதிக வேட்பாளரை விஜயகாந்த் இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாமகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இந்நிலையில் சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , மாபெரும் வெற்றி கூட்டணியாக இந்த மெகா கூட்டணி அமைந்து இருக்கிறது . நிச்சயமாக 40 தொகுதியிலும் வென்று தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களையும் உறுதியாக பெற்றுத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது . தேமுதிக_வின் வேட்பாளர் பட்டியலை கேப்டன் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் . நாளும் நமதே , நாடும் நமதே , நாற்பதும் நமதே என்று பிரேமலதா தெரிவித்தார்.