Categories
அரசியல் மாநில செய்திகள்

”விஜயகாந்த் பிறந்த நாள்” தலைவர்கள் வாழ்த்து ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67_ஆவது பிறந்தநாளை விழாவை கொண்டாடி வருகிறார்.இதற்காக அவர் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவருடைய பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகதிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

Image

முன்னதாக விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி100 கிலோ எடையுடைய கேட்க வெட்டப்பட்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை தம்பதிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தாமாக தலைவர் ஜிகே வாசன் நேரில் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் , பாஜகவின் தலைவர் தமிழிசையும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடும் வகையில் செப்டம்பர் 15_ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுவார் என்று கட்சி சார்பில் சொல்லப்பட்டு வருகின்றது.

Categories

Tech |