தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டன்று, தொண்டர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார்.
தேமுதிக தலைவரான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்களாக தொண்டர்களை சந்திக்கவில்லை. ஓய்வெடுத்து வரும் அவர், நீண்ட நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அங்கு, தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, கேலண்டர்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கியதோடு, புத்தாண்டு பரிசாக ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார். அவர் கொடுத்த தொகை சிறியது, என்றாலும் தலைவரின் கையால் வாங்கிய மகிழ்வுடன் தொண்டர்கள் சென்றிருக்கிறார்கள்.