Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் விஜயகாந்த் – ராமதாஸ் சந்திப்பு ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கின்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் .

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைந்துள்ளது . பாமக_விற்கு 7 தொகுதியும் , தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒப்பந்தமாகியுள்ளது .மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்தது ஏனெனில் வட மாவட்டங்களில் தேமுதிக_விற்கும் , பாமக_விற்கும் கொள்ளகை ரீதியில் விமர்சனம் தொடர்ந்து வந்தது.

Image result for விஜயகாந்த் - ராமதாஸ்

இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் வேண்டுமென்று தேமுதிக கோரிக்கை வைத்து நீண்ட இழுபறி நீடித்து வந்த பின் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது .இந்நிலையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருக்கின்றார். இதில் அன்புமணியும் பங்கேற்கிறார்.கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக – பாமக ஒரே கூட்டணியில் இருந்து சந்திப்பு நிகழவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |