Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் தருகின்றேன்…! ”விஜயகாந்த் எடுத்த முடிவு” பெரிய மனசு வேணும் …!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்த இரண்டு மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணங்களால் உடலை தூக்கிக்கொண்டு வேறு, வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டது. மருத்துவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கு செய்யக்கூடிய மரியாதை இதுதானா என்று வீடியோ மூலமாக மருத்துவர்களும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 

இதனையடுத்து சென்னை மாநகராட்சியும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல் மூலம் வைரஸ் பரவாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருக்கின்றார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு பலரின் கவனத்தை பெற்றதால் அனைவரும் பாராட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |