வாங்கிய கடனை கட்டாததால் நடிகர் விஜயகாந்தின் வீட்டை ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையில் நடிகராக இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்ததும் சினிமைவை கைவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வாங்கிய கடனுக்கான வட்டி என்று எதுவுமே செலுத்தாத நிலையில் இன்று விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விட இருப்பதாக IOB வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில் சுமார் ரூ 5,52,73,825 கடன் , வட்டி , இதர செலவை வசூலிக்க விஜயகாந்தின் சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் விஜயகாந்த மற்றும் பிரேமலதா_வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் க்கு பிறகு கடனை செலுத்தினால் ஏல நடவடிக்கை கைவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.