விஜயின் பீஸ்ட்திரைப்படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது.
இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் இதனை கொண்டதுடன் வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் படத்தை தணிக்கை குழு பார்த்துவிட்டு U/A சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை பாராட்டி உள்ளார்களாம். மேலும் விஜய் படத்தில் தனி ஆளாக நின்று தாங்கி செல்கிறார். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பீஸ்ட் திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா நடிகர்களுக்குமே சிறப்பான விருந்தாக அமையும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.