விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் முன்பிருந்த எடையை விட தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறார்.
மேலும் திரைப் படங்களில் ஆக்ஷனில் கலக்கிய விஜயகாந்த் தற்போது ஒரே இடத்தில் அமர்ந்தவாறு கைகளை மட்டும் அசைத்து பேசியுள்ளார். ஆகையால் இதனை கண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.