தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் தனித்து போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து விஜயகாந்த் மகன் பிரபாகரன் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஜெயிப்போம் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்நிலையில் அதிமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் தேமுதிகவின் கட்சி தலைவரான விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.