நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ திரைப்படத்தை நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் போட்டு காட்ட உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது .
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் போட்டுக்காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு முன் சிவகார்த்திகேயன் ‘கனா’ திரைப்படத்தை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரத்யேகமாக போட்டு காட்டியது குறிப்பிடத்தக்கது .