Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் அண்ண நல்லாருக்கிறது பிடிக்கலையா” டுவிட்டரில் அட்லீ போட்ட பதிவு…. கொதித்த விஜய் ரசிகர்கள்…!!

சிபியை வாழ்த்தி அட்லீ போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆவேசமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி லைக்கா நிறுவனத்துடன் நடிகை சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்க இருக்கிறார். இவர் இயக்குனர் அட்லியுடன் உதவியாளராக இருந்தவர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய ஹீரோ வெயிட்டான தயாரிப்பு நிறுவனத்தை வைத்து அசத்துகிறார் இந்த சிபி என்று பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து சிபி சக்கரவர்த்தியை வாழ்த்தி அட்லீ பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ஆவேசம் அடைந்துள்ளனர். மாஸ்டர் படம் பற்றி ஒரு பதிவு கூட போடாத அட்லி, தற்போது தம்பி சிபிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல வந்து விட்டீர்களா? என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் லோகேஷ் உங்களை விட திறமையாக படமெடுத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்றும் கேட்டுள்ளனர்.

மேலும் சில ரசிகர்களோ எங்க விஜய் அண்ணாவை வைத்து எப்போது மீண்டும் படம் எடுக்க போகிறீர்கள் ? என்று கேட்க, அதை பார்த்த சிலர் “வாயை மூடிட்டு இருங்க, விஜய் அண்ணா நல்லா இருக்குறது உனக்கு புடிக்கலையா” என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அட்லீ டுவிட்டர் சண்டை களமாக மாறியுள்ளார்.

Categories

Tech |