Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் இருந்தாலும்…. இல்லைனாலும்…. “கட்சி இருக்கும், எதிர் நீச்சல் போடுவேன்” விஜய் தந்தை பேட்டி….!!

கடந்த சில நாட்களாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் புதியதாக கட்சி ஒன்றை பதிவு செய்ததில் இருந்து பல்வேறான பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தனியாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து கட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, தற்போது யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அஇதவிமஇ கட்சி நடத்தப்படும் என விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தாம் எப்போதும் இருந்ததில்லை. எதிர்நீச்சல் போடுவதையே விரும்புகிறேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் மிரட்டல் வரும் என்பது தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 

Categories

Tech |