பொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார்.
இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய் 50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தாராளமாக அணுகலாம் என்றும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.